குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-06-04 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைகாசிமாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்