குஜிலியம்பாறை ஒன்றியக்குழு கூட்டம்

குஜிலியம்பாறை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-06-10 14:46 GMT

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம்  நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகம்மது சித்திக் வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்பட 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்தனர். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கணக்கர் பெருமாள் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்