விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாராட்டு

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-12-06 19:55 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை வரிசைப்படுத்தி பேசினார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளை பேச அழைத்தார். அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி மேகலா என்பவர் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதனால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று விரிவாக பேசினார். மாணவியின் பேச்சை அனைவரும் வரவேற்று கைதட்டினர். இந்தநிலையில் அந்த மாணவியை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நேற்று மதியம் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். அப்போது தாசில்தார்கள் லோகநாதன், ஆனந்தராஜ் மாணவியின் பெற்றோர் ரவிக்குமார், ஜக்கம்மாள், தலைமை ஆசிரியை லதாதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்