பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவேங்கடம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திருவேங்கடம்:
மத்திய அரசால் நடத்தப்பட்ட பிரதமர்யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு பிரிவில் தேர்வெழுதிய 2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். சுபாஷ் கண்ணன் என்ற மாணவன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5-வது இடத்தையும் பெற்றனர். மேலும் 11-ம் வகுப்பு பிரிவில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக மாணவி வித்யா பொதுப்பிரிவில் 18-வது இடத்தையும், மாணவி முத்துலட்சுமி பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 22 மாணவ மாணவிகள் பிரதமர் யாசவி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பெற்றோர்கள், பயிற்சி அளித்த ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினார்கள்.