வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உள்ள சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நீலமேகம் வரவேற்றார். இப்பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்று வேறு பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயின்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கும், தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் நாகப்பட்டினம் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பாராட்டு சான்றிதழ் பெற்ற தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் தன்னார்வலர் மீனாம்பாள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வின்போது தனது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.