நாகை மாவட்டம் முழுவதும் சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் குற்ற செயலில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி, வெகுமதி அளித்து கவுரவித்தார்.