தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2022-06-30 14:35 GMT

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழக அணி 17 வயது மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட 2 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியில் திண்டுக்கல்லை சேர்ந்த 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்படி, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் குபேந்தரா, பிரனேஷ் ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஹரிஷ் ராகவன் என்பவரும் தங்கப்பதக்கம் வென்றனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் திரும்பிய வீரர்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஸ்கேட்டிங் பேஸ்கட்பால் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் மாவட்ட விளையாட்டு வீரர்கள் சங்க தலைவர் ஞானகுரு‌ கலந்துகொண்டு, வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். இந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர் வெங்கட், செயலாளர் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்