தங்க பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-07-28 20:00 GMT

மதுரை சகோதயா அமைப்பு சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி திண்டுக்கல் ஏ.கே.வி. வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் 12 வயது முதல் 19 வயது வரை 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி அணிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் திண்டுக்கல் ஏ.கே.வி. வித்யாலயா பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் எஸ்.ராமலிங்கம், முதல்வர் கற்பகம், உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் காசிராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்