தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தூத்துக்குடி பியல்சிட்டி ஜே.சி.ஐ. சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சுரேஷ், மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பியர்ல்சிட்டி ஜே.சி.ஐ செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், திட்டத்தலைவர் தினேஷ் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.