தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி கூட்டரங்கில் செங்கோட்டை நகராட்சி- தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொ) ஜெயப்பிரியா, சுகதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம் வரவேற்றார். அதனைதொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவா் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளா்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார மேற்பார்வையாளா் காளியப்பன் நன்றி கூறினார்.