பழனி மாணவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த பழனி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2022-12-22 19:00 GMT

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில், மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி பழனி பகுதியை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். இதில் 7 பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 9 பேர் வெள்ளிப்பதக்கத்தையும், 9 பேர் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்