நாட்டிய ரத்னா விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு

ஆற்காட்டில் நாட்டிய ரத்னா விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-10-05 18:28 GMT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆற்காடு சரஸ்வதி பரத நாட்டிய பள்ளி சார்பில், ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மகாத்மாவின் நாளில், மகத்தான சாதனை என்னும் பரத நாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 13 மணி நேரம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை செய்தனர். இதில் ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்-1 மாணவி ஹேமமாலினி கலந்து கொண்டு நாட்டிய ரத்னா விருது பெற்றார். விருது பெற்ற மாணவியை லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் மற்றும் பள்ளி முதல்வர் சுவேதா ஆகியோர் பாராட்டி வாழ்த்தி பரிசு, புத்தகம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்