முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

1 கோடி பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திருவாரூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-09-14 18:45 GMT

1 கோடி பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திருவாரூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், சாந்தி, பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

அண்ணா பிறந்த நாளான இன்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து, அனைத்து ஒன்றிய, நகர, வார்டுகளில் கட்சி கொடி ஏற்றி கொண்டாடுவது, 1 கோடி பெண்கள் பயன் பெறும் வகையில், மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கொள்வது. சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் மாவட்ட அளவில் அதிக மாணவிகள் பங்கேற்ற செய்திட வேண்டும்.

முப்பெரும் விழா

வேலூரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரும் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, செந்தில், ஒன்றிய செயலாளர்கள் புலிவலம் தேவா, பாலச்சந்திரன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்