4 கோவில்களில் குடமுழுக்கு

4 கோவில்களில் குடமுழுக்கு

Update: 2023-06-03 18:45 GMT

திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பில் உள்ள செவிசாய்த்த விநாயகர், செங்கழனியப்ப அய்யனார் மகா சாஸ்தா, பத்ரகாளியம்மன், கைலாசநாதர் ஆகிய 4 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த மே மாதம் 29-ந்தேதி தனபூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. 30-ந்தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமமும், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 31-ந்தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து 4-ம் கால யாகசாலை, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் செவிசாய்த்த விநாயகர் கோவில் குடமுழுக்கும், கைலாசநாதர் கோவில் குடமுழுக்கும், பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கும், செங்கழனியப்பர் மகா சாஸ்தா கோவில் குடமுழுக்கும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்