நடைபயிற்சி சென்றபோது தவறி விழுந்து கே.எஸ்.அழகிரி காயம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பணிநத்தம் ஆகும். நேற்று காலை 6.30 மணிக்கு அவர் அங்குள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார்.;

Update: 2023-07-28 20:57 GMT

கடலூர்,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பணிநத்தம் ஆகும். நேற்று காலை 6.30 மணிக்கு அவர் அங்குள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் சம்பந்தம், கே.எஸ்.அழகிரியை சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கே.எஸ்.அழகிரிக்கு ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இடுப்பு எலும்பில் உள்ள சவ்வில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. எனவே கண்டிப்பாக 15 நாட்கள் ஓய்வு எடுக்க கே.எஸ்.அழகிரிக்கு டாக்டர் அறிவுரை கூறினார். இதையடுத்து அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்