சுப்பிரமணிய சாமி கோவிலில் கிரிவலம்

வேடந்தாங்கல் சுப்பிரமணிய சாமி கோவிலில் கிரிவலம் நடைபெற்றது.

Update: 2023-02-26 18:38 GMT

சோளிங்கரை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவர் சுப்பிரமணிய சாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்