குறிஞ்சிப்பாடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
குறிஞ்சிப்பாடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி விழப்பள்ளத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் புது விநாயகர் கோவில் தெருவில் உள்ள புது சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.