பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் குறிஞ்சி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில் கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பாலாபிஷேகம், 7 மணிக்கு பஞ்சகாவிய பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 5 மணிக்கு சிவனுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.