பொதுமக்களுக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செங்கோட்டையில் பொதுமக்களுக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
செங்கோட்டை:
அ.தி.மு.க. சார்பில், எதிர்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதியில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, மாவட்ட விவசாய அணிச்செயலாளா் பரமகுருநாதன், நகரச்செயலாளா் கணேசன், அவைத்தலைவர் தங்கவேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.