கிருஷ்ணகிரியில் சரக அளவிலான தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது.

Update: 2022-09-14 18:45 GMT

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது.

48 பள்ளிகள்

கிருஷ்ணகிரி சரக அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.

போட்டியில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட 3 பிரிவுகளில் 48 பள்ளிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர் ஓட்டம்

தடகள போட்டியில், 100, 200, 400, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடந்தன. இன்றும் (வெள்ளிக்கிழமை) விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைநாதன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் சங்க தலைவர் ஜெயகுமார், சந்தோஷ், நகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்