கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம்
ஆற்காடு திரவுபதி அம்மன் கோவிலில் கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஆற்காடு நகரில் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது.
115 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவின் 48-வது நாள் விழாவாக கிருஷ்ண பரமாத்மா - ருக்மணி பிராட்டி திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து சீர்வரிசைகள் பஜனை பாடல்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமானோர் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்திருந்னர். பின்பு கிருஷ்ண பரமாத்மா - ருக்மணி பிராட்டி திருக்கல்யாணம் ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பட்டம்மாள் குடும்பத்தினர் தலைமையில் நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.