பிதிர்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்-பொம்மன், பெள்ளி தொடங்கி வைத்தனர்
பிதிர்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்- பொம்மன், பெள்ளி தொடங்கி வைத்தனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே பிதிர்காடு ஸ்ரீதுர்க்கா பாலகோகுலம்-தஞ்சோரா, விசுவஇந்துபரித், அனைத்து ஆலய ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. பாட்டவயல், கொட்டாடு காமராஜ்நகர் உள்பட பல கோவில்களிலிருந்து குழந்தைகள் கண்ணன் ராதை வேடங்கள் ஊர்வலமாக சென்றனா. அப்போது கோலாட்டம் நடந்தது. ஊர்வலத்தை முதுமலை ஆஸ்கார் விருதுபெற்ற பொம்மன், பெள்ளி, தம்பதியினர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் பிதிர்காடு பஜார் வரை சென்று மீண்டும் பஞ்சோரா சக்தி முனீஸ்வரன் முத்துமாரியம்மன் கோவிலை சென்றடடைந்தது. கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.