கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம்
சுத்தமல்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது.
பேட்டை:
சுத்தமல்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது. சுத்தமல்லி அன்னை காந்திமதி அம்பாள் அன்பு இல்லத்தில் குழந்தைகள் ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து அங்குள்ள தெருக்கள் வழியாக வீதி உலா வந்து அன்பு இல்லத்தை வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணர் பாடல்களோடு பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளம் பாரதம் இயக்குனர் வழக்கறிஞர் நிதிஷ் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இளம் பாரதம் மாவட்ட செயலாளர் வள்ளிநாயகம், இணை செயலாளர் வினோத், பா.ஜனதா ஒன்றிய தலைவர் அங்குராஜ், ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். இல்ல பொறுப்பாளர் முத்தாரசெல்வி நன்றி கூறினார்.