வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டபாளையம் வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கொண்டபாளையத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக சிறுவர்களுக்கு உறியடியும், இளைஞர்களுக்கு சறுக்குமரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.