குபேரகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குபேரகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா;

Update: 2023-09-07 18:45 GMT

முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் குபேர கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி குபேரகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறியடி விழா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சட்டநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்