கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில்ஆவணி பிரதோஷ விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆவணி பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி(கிழக்கு):
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவிலில் ஆவணி மாத பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூவன நாத சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, கருப்புச்சாறு, சந்தனம், ராயபுரி சர்க்கரை உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் நந்தியம் பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் ெசய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இவ்விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ. ராஜகுரு, அறங்காவலர் திருப்பதி ராஜா, செயல்அலுவலர் கி.வெள்ளைச்சாமி, ஆய்வாளர் த.சிவகலை பிரியா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.