மாவட்ட எறி பந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளிஅணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட எறி பந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளிஅணி வெற்றி பெற்றது.

Update: 2022-10-19 18:45 GMT

கோவில்பட்டி:

குமாரகிரி சி. கே. டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவில் எறிபந்து போட்டி நடந்தது. போட்டியில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் இப்பள்ளி அணி, ஸ்ரீவைகுண்டம் பள்ளி அணியுடன் மோதியது. இதில் 15-9 என்ற புள்ளி கணக்கில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.

வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கில் நடந்தது. பள்ளி தலைவர் ஆர். ஏ. அய்யனார் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்