கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-11 11:13 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதைகளில் மின் கம்பங்களுக்கு இடையே உள்ள அதிகமான இடைவெளிகளில் புதிய மின்கம்பங்கள் நடும் பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி மதியம் 1 மணி வரை

கோவில்பட்டி உப மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு ஈ.பி. ஆபீஸ் வரை மேற்குப் பகுதிகளுக்கும், இந்திரா நகர் வடக்கு தெற்கு பகுதிகள், சீனிவாச நகர் 6 வது தெரு ஆகிய பகுதிகளுக்கும்,

நக்கல முத்தன்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஆவல்நத்தம் பகுதிக்கும். விஜயாபுரி உப- மின் நிலையத்தின் துரைச்சாமிபுரம், கீழப்பாண்டவர் மங்கலம், சாய் சிட்டி, சண்முக சிகாமணி நகர், ராஜூவ் நகர், தெற்கு மற்றும் வடக்கு திட்டங் குளம், கூசாலிபட்டி ரோடு, பசும்பொன் நகர், கரிசல்குளம், சிவந்திபட்டி, முடுக்கலாங் குளம், காமநாயக்கன்பட்டி, எட்டு நாயக்கன் பட்டி, இலந்தப்பட்டி, குருவி நத்தம், கொப்பம்பட்டி, செவல்பட்டி ஆகிய பகுதிகளுக்கும். கோவில்பட்டி சிட்கோ உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கணேஷ் நகர், தங்கப்பன் நகர், ஜோதி நகர் ஆகிய பகுதிகளுக்கும். எட்டயபுரம் உப- மின் நிலையத்தின் கீழ ஈரால், நக்கலக் கோட்டை, வீரப்பட்டி, கருப்பூர், வெங்கடாசலபுரம், அய்யா கோட்டையூர், லிங்கம் பட்டி, பெருமாள் பட்டி, வரதம்பட்டி, சின்னமலை குன்று ஆகிய பகுதிகளுக்கும் மின் தடை ஏற்படும்.

மேலும், எம்.துரைசாமி புரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் வானரமுட்டி, காளாம்பட்டி, கோபாலபுரம், நாச்சியார் புரம், வி. குமரெட்டியாபுரம், வெயிலுகந்தபுரம், வி.நாச்சியார் பட்டி, அழகப்பபுரம், பாலகிருஷ்ணாபுரம், காலாங்கரைப்பட்டி, கெச்சிலாபுரம், சங்கரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும்,

கழுகுமலை உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சி. ஆர். காலனி, கரடிகுளம் ஆகிய பகுதிகளுக்கும், கடம்பூர் உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் குப்பனாபுரம், ஒட்டுடன்பட்டி ஆகிய பகுதிகளுக்கும்,

பசுவந்தனை உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பொம்மையாபுரம், பரசுராமபுரம், தீத்தாம்பட்டி, தொட்டம்பட்டி, கோவிந்தம்பட்டி, வண்டானம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும்,

எப்போதும் வென்றான் உபமின் நிலையத்திலிருந்துமின் வினியோகம் பெறும் சிவஞானபுரம், துரைச்சாமிபுரம், நீராவி புதுப்பட்டி, ஸ்ரீ ரெங்கபுரம், குமாரகிரி, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்