காங்கயம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவில் நிலம்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக காங்கயம் வட்டாரத்தில் 900 ஏக்கர் உள்ளது. இதில் சிவன்மலை சுற்றுப்பகுதியில் மட்டும் 233 ஏக்கர் நிலம் உள்ளது. அதன்படி காங்கயம் அருகே நீலக்காட்டுபுதூர் பகுதியில் கோவில் நிலம் கடந்த 2022-ம் ஆண்டு அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது. அப்போது அந்த நிலத்தில் நீலக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள் இது கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு முறை அளந்து அங்குகல் நடுவதற்காக சிவன்மலை முருகன் கோவிலில் இருந்து உதவி ஆணையர் அன்னக்கொடி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் பால்ராஜ், நில அளவையாளர்கள் கிருஷ்ணகாந்த், பிரதீஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு வந்தனர். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினைசேர்ந்த நிர்வாகிகள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு எவ்வித முன்னறிவிப்பும் எங்களுக்கு தெரிவிக்காமல் வந்ததற்காக கல் நட அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பணிகள் நிறுத்தம்
மேலும் நிலம் அளவீடு செய்ததில் சந்தேகம் இருப்பதாகவும், இதனால் தற்போது கல் நடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகள் குழுவினர் கல் நடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதையடுத்து உதவி ஆணையர் அன்னக்கொடி மற்றும் காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் மேற்படி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வருவாய் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பின் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறினர்.
இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட