அலங்காநல்லூர் அருகே கோவில்காளை இறந்தது; கிராம மக்கள் அஞ்சலி
அலங்காநல்லூர் அருகே கோவில்காளை இறந்தது . கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தில் உள்ள மஞ்சமலை சுவாமி கோவில் காளை வயது முதிர்வின் காரணமாக இறந்தது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி காசுகளையும், பல்வேறு பரிசு பொருட்களையும் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது. ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளையாக இந்த காளை வலம்வரும்.
இந்நிலையில் காளை திடீரென இறந்த தகவலறிந்து சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள் பலரும் வந்து காளைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் வெளியூர்மக்கள் பலரும் இறந்த காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பெண்கள் உள்பட மொத்த கிராமமே ஒன்று திரண்டு காளையை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு அருகே அடக்கம் செய்தனர்.