ரூ.3 கோடி கோவில் நிலம் மீட்பு

Update: 2023-05-12 16:21 GMT


திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவிலின் மேற்கு மதில் சுவர் அருகில் வள்ளியம்மாள் என்பவர் தனது பெயரில் உள்ள 10 சென்ட் இடத்தை கோவிலுக்கு கால சந்தி கட்டளைக்காக கோவிலுக்கு உயில் சாசனம் எழுதிக்கொடுத்துள்ளார். இந்த நிலம் கடந்த பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் குமரதுரை தலைமையில் கோவில் செயல் அதிகாரி சரவணபவன் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 சென்ட் இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.3 கோடியாகும்.

மேலும் செய்திகள்