ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு

Update: 2023-03-15 17:11 GMT

ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு

காங்கயம் அருகே உத்தமபாளையத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் உத்தமபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் குமாரதுரை அறிவுறுத்தலின்படி நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தை 2 பேர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார், தனிதாசில்தார் (ஆலய நிலங்கள்) மகேஸ்வரன், ஆய்வாளர் அபினயா, கோவில் தக்கார் திலகவதி மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கோவில் வசம் எடுக்கப்பட்டது. மொத்தம் 10.70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.

மேலும் செய்திகள்