நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
சென்னிமலை
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு ஆதித்யா நகரில் நர்மதை மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவர் சாமி உள்ள கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறாவளி காற்றால் தூக்கி வீசப்பட்டது.
தற்போது மேற்கூரை பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கோவிலின் நிர்வாகி சரவண சாமிகள் தலைமையில் சொர்ண ஆகர்சன பைரவர் சாமிக்கு தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.