திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது. இந்தப் பணியில் திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், ஆதிஸ்வர் டிரஸ்ட், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை, பக்தர்கள் உள்பட 175 பேருக்கு மேல் உழவாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் வளாகம், நந்தவனம், உள் மற்றும் வெளி பிரகாரங்கள், சுற்றுச்சுவர், நாயன்மார்கள் மண்டபம், உற்சவருக்கான சப்பரங்கள், கொடிமரம், விமான பகுதிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் தூய்மை செய்தனர். உழவாரப்பணி முடிந்தவுடன் கோவில் நிர்வாகத்தின் சாா்பில் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.