ஒலகடம் சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்

ஒலகடம் சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்

Update: 2023-05-04 21:14 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அடுத்துள்ள ஒலகடத்தில் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன், மாரியம்மன், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 9-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்