நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-05 21:05 GMT

அம்மாபேட்டை

நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செல்லாண்டியம்மன்

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலின் குண்டம் விழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 3-ந் தேதி கரகம், கபாலம், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு குண்டம் கண்திறப்பு நடந்தது. அதன்பின்னர் முப்போடு அழைத்தல், குதிரை துளுக்கு ஆகியவை நடைபெற்றது.

தீ மிதித்தனர்...

இதையடுத்து கோவில் பூசாரி குண்டத்துக்கு பூக்களை தூவி பூஜை செய்தார். பின்னர் தீ மிதித்தார். அவரை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குண்டம் விழாவை தொடர்ந்து நேற்று மதியம் நடுமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்