நெரிஞ்சிப்பேட்டையில் கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம்

நெரிஞ்சிப்பேட்டையில் கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம்

Update: 2023-03-16 21:12 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் உள்ள மேட்டூர் ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பச்சியம்மன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அப்பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் இக்கோவில் நிலங்கள் அனைத்துக்கும் எல்லைகளை கண்டறிந்து அளவீடு செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி நில அளவையாளர்கள் மூலம் கோவில் நிலங்களின் எல்லைகளை கண்டறிந்து கற்கள் நடப்பட்டு வருகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் கவுசல்யா ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜ் கோவில் பணியாளர்கள், நில அளவையர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்