ஈரோட்டில் நிலா பிள்ளை சோறு விழா- பெண்கள் கும்மி அடித்து மகிழ்ந்தனர்
ஈரோட்டில் நிலா பிள்ளை சோறு விழா- பெண்கள் கும்மி அடித்து மகிழ்ந்தனர்
கொங்கு மண்டலத்தில் தை பூச விழாவுக்கு முந்தையநாள் நிலா பிள்ளை சோறு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சிறுமி ஒருவரை அம்மனாக பாவித்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்துவார்கள்.
அதன்படி ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர்நகரில் நிலா பிள்ளை சோறு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக 5 நாட்களாக தினமும் ஒவ்வொரு வழிபாடு நடத்தப்பட்டது. இறுதிநாளான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்தும், கோலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர்.