புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடக்கிறது
புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடக்கிறது
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி யாகத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், பின்னர் கோபுர கலசங்கள் அமைத்தலும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு பட்டிமன்றமும் நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து புனித நீர் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சிறப்பு பக்தி சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம், மதியம் 2.30 மணிக்கு சக்தி அழைத்தல், மாலை 6.30 மணிக்கு சாமுண்டி அழைத்தல், இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் பி.கே.வெங்கடாசலம், அறங்காவலர்கள் கே.குணசேகரன், ஆர்.ஈஸ்வரன், பி.ஜி.ராஜ், எஸ்.பூங்கொடி தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.