ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு

ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடந்தது.;

Update:2022-12-26 02:27 IST

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடந்தது.

அய்யப்ப சாமி

ஊஞ்சலூர் நாகேஷ்வர சாமி கோவிலில் உள்ள அய்யப்ப சாமிக்கு காவிரியில் நேற்று ஆராட்டு விழா நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் மஹா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் காவிரி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட மேடையில் அய்யப்ப சாமிக்கு திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆராட்டு

பின்னர் தீர்த்தவாரி எனப்படும் ஆராட்டு வைபவம் நடைபெற்றது. அதன்பின்னர் 11 மணி அளவில் சங்காபிஷேகம் செய்யப்பட்டு் சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மேல் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 6.30 மணி அளவில் அய்யப்பனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்