கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொப்பனை கொளுத்தப்பட்டது.

Update: 2022-12-06 21:19 GMT


கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொப்பனை கொளுத்தப்பட்டது.

கோபி

கார்த்திகை தீபத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி பவளமலை, முத்துக்குமாரசாமி கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் முதலில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி கருட கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னிமலை

கார்த்திகை தீபத்தையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலையில் தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள மார்க்கண்டேஸ்வரர் கோவிலிலும் தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்