எருதுகட்டு விழாவில் இந்த ஆண்டு பயிர் விளைச்சலை கணித்த வெள்ளைக்காளை

சிங்கம்புணரியில் நடந்த எருதுகட்டு விழாவில் இந்த ஆண்டு பயிர் விளைச்சலை வெள்ளைக்காளை கணித்தது.

Update: 2022-10-11 17:54 GMT


சிங்கம்புணரியில் நடந்த எருதுகட்டு விழாவில் இந்த ஆண்டு பயிர் விளைச்சலை வெள்ளைக்காளை கணித்தது.

புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்க ஆண்டுதோறும் சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் புரட்டாசி மாதம் புரவி எடுப்பு விழா நடைபெறும். இதையொட்டி சந்திவீரன் கூடத்தில் உள்ள வீரையா கோவிலில் எருதுகட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் முன்பு எருதுகட்டு விழா நடைபெற்றது.

இதில் உடல், கொம்பு, கால் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட காளையை வீரையா கோவில் முன்பு கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

சலங்கை

எருதுகட்டுக்காக தேர்வு செய்த காளையை வீரையா கோவிலில் இருந்து நீண்ட கயிற்றுடன் 4 கால்களிலும் வெங்கல சலங்கைகள் கட்டப்பட்டு அவிழ்த்து விடப்படும். காளையை விரட்டும்போது கால்களில் கட்டப்பட்டு உள்ள சலங்கைகளில் இருந்து அவிழ்ந்து விழும் சலங்கை மணிகளை கணக்கிட்டு இந்த ஆண்டு விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்று கணிப்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இற்காக வீரையா கோவிலில் சந்தி அம்பலம் குடும்பத்தார்கள் சார்பில் ஒச்சம் இல்லாத உடல், தலை, காது, கால்கள் போன்ற அனைத்தும் வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளை காளை கன்று தேர்வு செய்யப்பட்டு வீரையா கோவிலில் கட்டி வைக்கப்பட்டது.

புனித தீர்த்தம்

தொடர்ந்து கூவாண கண்மாயில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கிராமத்தார்கள் சார்பில் காளைக்கு தெளிக்கப்பட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை சீரணி அரங்கம் வரை இளைஞர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது ஒரு மணி அவிழ்ந்து விழுந்ததால் விவசாயதில் இந்த ஆண்டு முழு விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எருதுகட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தி அம்பலம் குடும்பத்தார்கள் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள், சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் வீரையா கோவில் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்