ராமேசுவரம்,
பள்ளிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். சாலை வளைவில் நின்று கடல் மற்றும் கடற்கரை அழகை சுற்றுலா பணிகள் பார்த்து ரசித்தனர்.