அந்தியூர் தவுட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-09-13 20:22 GMT

அந்தியூர்

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. 12 ஆண்டுகள் முடிவுற்றதை தொடர்ந்து இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.

அதன்பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் புனிதநீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலாவும் நடைபெற்றன. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்