5,000 பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
5,000 பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பால்குடம் முதுகுளத்தூர் விநாயகர் கோவிலில் இருந்து பஸ் நிலையம் வழியாக வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். இதில் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.