சென்னிமலை முருகன் கோவிலில் 8-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சென்னிமலை முருகன் கோவிலில் 8-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

Update: 2022-07-08 22:22 GMT

சென்னிமலை

சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி 8-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள் பாலித்தனர். பின்னர் உற்சவமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்