கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

3-வது நாளாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2023-10-02 18:31 GMT

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 30-ந்தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தங்களது 700 படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். 3-வது நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீனவர்கள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்