கோட்டைமேடு முனீஸ்வரனுக்கு உற்சவ விழா

கொள்ளிடம் அருகே உள்ள கோட்டை முனீஸ்வரனுக்கு நடந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-07-02 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள கோட்டை முனீஸ்வரனுக்கு நடந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோட்டைமேடு கிராமம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கிராமம் பழையாறு துறைமுகம் அருகே உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள முனீஸ்வரனுக்கு காலம் காலமாக ஆட்டுக்கிடாய்கள் வெட்டி பலியிட்டு படையலிடும் உற்சவ விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. கோட்டைமேடு என்று அழைக்கப்படும் இந்த கிராமம் சோழர்களின் கடைசி கிராமமாக இருந்து வந்தது. இங்கு சோழ வம்சத்தினர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த கிராமத்தில் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு 100-கணக்கான குடும்பங்களை வசித்து வந்தனர். இவர்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். சுனாமியால் நிலத்தடி நீர் முற்றிலும் மாறி உப்புநீராக மாறிவிட்டது. இதனால் இங்கு வாழ்ந்து வந்த கிராமமக்கள் வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாத்தால் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு ஆடு, மாடுகளுடன் வெளியேறி கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

முனீஸ்வரனுக்கு படையல்

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள முனீஸ்வரனுக்கு பாரம்பரியமாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முன்புள்ள ஒரு வெள்ளிக்கிழமையில் படையலும் பரிவார தெய்வத்துக்கு 40-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய் பலியிட்டு அதனை சமைத்து படையல் இட்டு அங்கேயே உணவருந்தி விட்டு வருவது வழக்கம்.

அதன்படி கடந்த வெள்ளிகிழமை அந்த கிராமத்துக்கு அங்கு வாழ்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகின் மூலமும், கொள்ளிடத்திலிருந்து சிதம்பரம் வழியாக கோட்டைமேடு கிராமத்துக்கு தரை வழியாகபும் சென்று ஆட்டு கிடாய்களை முனீஸ்வரனுக்கு பலியிட்டு பின்னர் அதனை சமைத்து படையலிட்டு உணவருந்தி விட்டு இரவு வீடு திரும்பினர். சிலர் அங்கேயே தங்கி விட்டு சிலர் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்