கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்றது.

Update: 2023-07-10 19:45 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி எச்.பி.எப். அணியும், கோத்தகிரி காட்டிமா அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி காட்டிமா அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் மணிகண்டன் 58 ரன்கள், சுதாகர் 43 ரன்கள், கார்த்திக் 32 ரன்கள், யஸ்வந்த் 27 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 210 பந்துகளில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊட்டி எச்.பி.எப். அணி 24 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணி வீரர்கள் பிரதாப் 44 ரன்கள், சூர்யா 29 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தனர். காட்டிமா அணியின் பந்து வீச்சாளர்கள் யஸ்வந்த் 4 விக்கெட்டுகளையும், பெள்ளிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 105 ரன்கள் வித்தியாசத்தில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்