கோத்தகிரி புல்சன் அணி வெற்றி

ஐவர் கால்பந்து போட்டியில் கோத்தகிரி புல்சன் அணி வெற்றி பெற்றது.;

Update: 2023-09-20 19:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் மறைந்த தமிழக கால்பந்து வீரர் மகேஷ் நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி, நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒரு அணியில் தலா 5 வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கோத்தகிரி புல்சன் மற்றும் ஊட்டி லையோனல் அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய கோத்தகிரி புல்சன் அணி 6 கோல்கள் போட்டது. ஊட்டி லயோனல் அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. இதனால் 6-0 என்ற கோல்கள் கணக்கில் கோத்தகிரி புல்சன் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்